சத்தியமங்கலத்தில் ரூ.99.66 கோடியில் கட்டப்பட்ட புதிய குடியிருப்புகளில் ஆட்சியர் ஆய்வு

சத்தியமங்கலத்தில் ரூ.99.66 கோடியில் கட்டப்பட்ட புதிய குடியிருப்புகளில் ஆட்சியர் ஆய்வு
X

சத்தியமங்கலம் நகராட்சி நேதாஜி நகரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் ரூ.99.66 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் ரூ.99.66 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.99.66 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (23ம் தேதி) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் புதிய வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட நேதாஜி நகர் பகுதியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், ரூ.53.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்க தயாராக உள்ள 528 குடியிருப்புகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, சத்தியமங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட ராஜன் நகர் பகுதியில் ரூ.45.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 528 குடியிருப்புகளையும் அவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவாக கொண்டு வரும் வகையில் பணிகளை முழுமையாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனையடுத்து, சத்தியமங்கலம் வட்டம் பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், அயலக தமிழர் மற்றும் மறுவாழ்வுத் துறையின் சார்பில் இரண்டாம் கட்டமாக ரூ.6.91 கோடி மதிப்பீட்டில் 30 தொகுப்புகள் கொண்ட 120 குடியிருப்புகள் கட்டப்பட்டு வரும் பணியினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி நிர்வாகப் பொறியாளர் அன்பழகன், சத்தியமங்கலம் வருவாய் வட்டாட்சியர் சக்திவேல், பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவசங்கர், விஜயலட்சுமி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!