வாக்காளர் தின வினாடி வினா போட்டி: ஈரோடு மாவட்ட ஆட்சியர் அழைப்பு
வாக்காளர் தின வினாடி வினா போட்டி.
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, நடக்கவுள்ள வினாடி வினா போட்டியில் பொதுமக்கள் பங்கேற்க ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் வாக்காளர்கள் தேர்தல் நடைமுறையில் பங்கேற்பதை அதிகரிக்கும் நோக்கத்தில், 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ஸ்வீப் (SVEEP) திட்டத்தின்படி மாநில அளவிலான பொதுமக்களுக்கான வினாடி-வினா போட்டி வரும் 21ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி முதல் 11.15 மணி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் https://www.erolls.tn.gov.in/Quiz2024 என்ற இணையதள முகவரியில் தங்கள் பெயர் மற்றும் விவரங்களை வரும் நாளை (18ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (19ம் தேதி) ஆகிய இரண்டு நாட்களில் பதிவு செய்ய அனுமதிக்கப்படுபவர். போட்டியில் கலந்து கொள்வதற்கு பங்கேற்பாளரின் செல்போன் எண் மற்றும் இ-மெயில் முகவரியானது கட்டாயமாக உள்ளீடு செய்யப்பட வேண்டும்.
'இந்தியாவில் தேர்தல்கள்' என்ற தலைப்பின் அடிப்படையில் போட்டியானது நடைபெறும். மேலும் விவரங்களுக்கு, மாநில உதவி மைய எண் 1800-4252- 1950, மாவட்ட உதவி மைய எண் 1950 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu