ஈரோட்டில் மகளிர் சுய உதவிக் குழுவினரின் விற்பனைக் கண்காட்சியை தொடங்கி வைத்த ஆட்சியர்
சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தி கண்காட்சி மற்றும் விற்பனையினை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
ஈரோடு குமலன்குட்டையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தி கண்காட்சி மற்றும் விற்பனையினை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட குமலன்குட்டை பெருந்துறை ரோட்டில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தி கண்காட்சி மற்றும் விற்பனையினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
கண்காட்சியில் தரமான முறையில் உற்பத்தி செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள், மண்பாண்டங்கள், பவானி ஜமக்காளம், சென்னிமலை பெட்ஷீட், கைத்தறி சேலைகள், காட்டன் சேலைகள், பட்டுப்புடவைகள், துண்டுகள், ஆயத்த ஆடைகள், கால் மிதியடிகள், டிசைன் மிதியடிகள், பேன்சிப் பொருட்கள், காட்டன் பைகள், சணல் பைகள், மரச்செக்கு எண்ணெய்கள், பாத்ரூம் க்ளீனர்ஸ், மரச்சாமான்கள், மூங்கில் பொருட்கள், செயற்கை ஆபரணங்கள், பாக்குமட்டை பொருட்கள் போன்ற சிறப்பான பொருட்கள், நியாயமான விலையில் இடம்பெற்றுள்ளது.
இக்கண்காட்சியானது இன்று (12ம் தேதி) முதல் 20ம் தேதி முடிய 9 நாட்கள் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை ஈரோடு குமலன்குட்டை பெருந்துறை ரோட்டில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் (மகளிர் திட்ட அலுவலகம்) நடைபெறும். எனவே, பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு தரமான பொருட்களை நியாயமான விலையில் வாங்கி சுய உதவிக்குழுக்களை ஊக்குவித்து, பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியின் போது திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மைக்கேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) ரமேஷ், உதவி திட்ட அலுவலர்கள், வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu