ஈரோட்டில் பிரமாண்டமாக தொடங்கியது 19-வது புத்தகத் திருவிழா

ஈரோட்டில் பிரமாண்டமாக தொடங்கியது 19-வது புத்தகத் திருவிழா
X

ஈரோடு புத்தகத் திருவிழாவினை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து பார்வையிட்டார்.

தமிழ்நாடு அரசு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் நடத்தப்படும் புத்தகத் திருவிழாவை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து பார்வையிட்டார்.

தமிழ்நாடு அரசு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் நடத்தப்படும் புத்தகத் திருவிழாவை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர், இதுகுறித்து ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது,

தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சியால் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும், புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை இணைந்து நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 04 முதல் ஆகஸ்ட் 15 வரை 12 நாட்கள் ஈரோடு வீரப்பன்சத்திரம் சி.என்.சி கல்லூரி மைதானத்தில் காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறுகிறது.

ஈரோட்டில் கடந்த 2005ம் ஆண்டு முதல் புத்தக திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாநில அளவிலான புத்தக திருவிழா சென்னைக்கு அடுத்தபடியாக ஈரோடு மாவட்டத்தில் தான் சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. ஈரோடு புத்தக திருவிழாவை அடிப்படையாக கொண்டு தற்போது அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெறுகின்ற புந்தக திருவிழாவில் 230-க்கும் மேற்பட்ட தலைசிறந்த நரம் மிக்க தமிழ் மற்றும் ஆங்கில புத்தக அரங்குகளும் மற்றும் வெளிநாடுகள் மற்றும் பிறமாநிலங்களிலிருந்து ஆங்கில நூல் பதிப்பாளர்கள் வருகை புரிய உள்ளனர்.

தினமும் மாலை 6.00 மணி அளவில் முத்திரை பதிக்கும் தனித்துவமிக்க சொற்பொழிவு நிகழ்வுகளும், புத்தக சேமிப்பு உண்டியல், நூல் ஆர்வலர் சான்றிதழ் போன்ற மாணவர்கள் வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் பல சிறப்பு திட்டங்கள் நடைபெற உள்ளது. மேலும், புத்தக கண்காட்சிக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் வருகை புரிவதற்காக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகளும் பற்றும் பொதுமக்கள் வருவதற்காக, போக்குவரத்து வசதி மற்றும் காவல்துறை மூலம் பாதுகாப்பு வசதி மற்றும் மருத்துவ வசதி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த புத்தக திருவிழா ஆண்டிற்கு ஒருமுறைதான் நடத்தப்படுகிறது. எனவே, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைவரும் அதிக அளவில் கலந்து கொண்டு தங்களது வாசிப்பு திறனை மென்மேலும் அதிகரித்துக் கொள்ள வேண்டுமெனவும். மேலும், கர்நாடகா மாநிலம், பெங்களுரூ, சுபன் பூங்காவில் மாநில நூலகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. அங்கு பொதுமக்கள் வாரத்திற்கு ஒரு முறை, அதிக அளவில் வருகை புரிந்து புத்தகங்களை வாசித்து தங்களது வாசிப்புத் திறனை அதிகரித்துக் கொள்கின்றனர். அதே போன்று, ஈரோடு மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் விரைவில் செயல்பட உள்ள பூங்காவில், பொதுமக்கள் அமைதியான முறையில் வாரத்த்திற்கு ஒருமுறை புத்தகங்களை வாசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது என தெரிவித்தார்.

இவ்விழாவில், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாவட்ட நூலக அலுவலர் யுவராஜ், சிக்கய்ய நாயக்கர் கல்லூரி முதல்வர் மனோகரன், மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன், தேசிய நல விழிப்புணர்வு இயக்க தலைவர் பத்மஸ்ரீ.மயிலானந்தம், நந்தா கல்வி நிறுவனங்கள் தலைவர் சண்முகன், ஈரோடு வட்டாட்சியர் ஜெயக்குமார், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!