116வது பிறந்தநாள்: ஈரோடு நினைவகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு ஆட்சியர் மரியாதை

116வது பிறந்தநாள்: ஈரோடு நினைவகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு ஆட்சியர் மரியாதை
X

Erode news- ஈரோடு பெரியார் -அண்ணா நினைவகத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம். உடன், ஈரோடு எம்பி பிரகாஷ், எஸ்பி ஜவகர் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Erode news- முன்னாள் முதல்வர் அண்ணாவின் 116-வது பிறந்தநாளையொட்டி, ஈரோட்டில் தந்தை பெரியார் - அண்ணா நினைவகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Erode news, Erode news today- முன்னாள் முதல்வர் அண்ணாவின் 116-வது பிறந்தநாளையொட்டி, ஈரோட்டில் தந்தை பெரியார் - அண்ணா நினைவகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஈரோடு மாநகராட்சி பெரியார் வீதியில் உள்ள பெரியார்- அண்ணா நினைவகத்தில், முன்னாள் முதல்வர் அண்ணாவின் 116-வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம் பெரியார் வாழ்ந்த இல்லம் நினைவகமாக மாற்றப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. பெரியார்-அண்ணா நினைவகத்தில் செயல்பட்டு வரும் நூலகத்தில் தமிழ் நூல்கள், ஆங்கில நூல்கள் மற்றும் அன்பளிப்பு நூல்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

பெரியாரின் பத்திரிக்கை நிறுவனத்தில் முன்னாள் முதல்வர் அண்ணா பணியாற்றிய போது அவருக்கு பெரியார் இல்லத்தில் பேரறிஞர் அண்ணா, தங்குவதற்கு இடம் அமைத்து கொடுத்திருந்தார். அண்ணா ஈரோடு மாவட்டத்தில் இருந்த காலத்தில் வாழ்ந்து வந்த அந்த இல்லமானது பெரியார் நினைவு இல்லத்துடன் சேர்ந்தே உள்ளது.

அந்த இல்லத்தில் அண்ணா எழுதுவதற்கு பயன்படுத்திய மேசை, நாற்காலி, அரிக்கேன் விளக்கு, அந்த வீட்டின் சமையற்கூடம் ஆகியவை அதே நிலையில் பாதுகாப்பாக தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. அண்ணாவின் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும், செப்டம்பர் 15ம் தேதி தமிழ்நாடு அரசின், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, இன்று (15ம் தேதி) பெரியார்- அண்ணா நினைவகத்தில் நடைபெற்ற அண்ணா 116வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இவ்விழாவில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மனிஷ்.என், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், ஈரோடு மாநகராட்சி மண்டல குழுத் தலைவர்கள் பி.கே.பழனிசாமி, தண்டபாணி, ஈரோடு வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.சுகுமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் செ.கலைமாமணி, உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil