ஈரோடு, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ஆட்சியர் திடீர் ஆய்வு..!

ஈரோடு, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ஆட்சியர் திடீர் ஆய்வு..!
X

ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மற்றும் பெருந்துறை பகுதிகளில் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா செவ்வாய்க்கிழமை (இன்று) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை கருமாண்டிசெல்லிபாளையம் மற்றும் வில்லரசம்பட்டி ஆகிய பகுதிகளில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா செவ்வாய்க்கிழமை (இன்று) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடமானது 15,200 மெ.டன் அளவுள்ள 5 கிட்டங்கிகள், 2 பரிவர்த்தனைக்கூடங்கள், 1 சூரிய உலர்களம் மற்றும் 4 உலர்களங்களுடன் செயல்பட்டு வருகிறது. அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் முழுமையான அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் உள்ள ஏலக்கூடத்தில் ஏலத்திற்காக வைக்கப்பட்டிருந்த மஞ்சள் மாதிரிகள் பார்வையிடப்பட்டது. UMP மென்பொருள் மூலம் மஞ்சள் ஏலம் நடைபெறும் முறை பார்வையிடப்பட்டது. விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் மறைமுக மஞ்சள் ஏலம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.


பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உள்ள 10,000 மெ.டன் ஊறுர் கிட்டங்கியில் விவசாயிகள் இருப்பு வைத்துள்ள மஞ்சள் மூட்டைகள் பார்வையிடப்பட்டது டது. UMP மென்பாருள் மூலம் மஞ்சள் ஏலம் நடைபெறும் செயல்முறை மற்றும் விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா செய்யும் முறைகள் பார்வையிடப்பட்டன. மேலும் விற்பனைக்கூட வளாகத்தினுள் பெரிய அளவிலான குப்பைத் தொட்டிகள் வைத்திட அறிவுறுத்தப்பட்டது. பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தினுள் உள்ள அக்மார்க் ஆய்வகம் பார்வையிடப்பட்டு அக்மார்க் தரச்சான்றிதழ் வழங்கிடும் நடைமுறை ஆய்வு செய்யப்பட்டது. பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடப்பு நிதியாண்டில் நாளது வரை தொகை ரூ.42.49 கோடி மதிப்புள்ள 5,761 மெ.டன் மஞ்சள் விளைபெருள் பரிவர்த்தனை செய்யப்பட்டு 2,440 விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என தெரிவித்தார்.


அதனைத் தொடர்ந்து, ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் மஞ்சள் வளாகத்தில் ஏலத்திற்காக வைக்கப்பட்டிருந்த மஞ்சள் மாதிரிகளையும் பார்வையிட்டார். லும், ஆல்பா சாப்ட்வோளூ (Alpha Software) முலம் மஞ்சள் ஏலம் நடைபெறும் செயல்முறை மற்றும் விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா செய்யும் முறைகள் பற்றி விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் கலந்துரையாடப்பட்டது. ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.131.27 கோடி மதிப்புள்ள 20,830 மெ.டன் மஞ்சள் விளைபொருள் பரிவர்த்தனை செய்யப்பட்டு 25,945 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

இந்த ஆய்வின்போது, ஈரோடு விற்பனைக்குழு செயலாளர்/துணை இயக்குநர் சாவித்திரி, கண்காணிப்பாளர்கள் ராஜேஸ்வரி, சுரேஷ், மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!