ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு..!

ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு..!
X

ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (18ம் தேதி) ஆய்வு மேற்கொண்டார்.

Erode Today News, Erode Live Updates - ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (18ம் தேதி) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ரோடு மாவட்டம் ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை இன்று (18ம் தேதி) வெள்ளிக்கிழமை நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வில், தன்பதிவேடு, முன்கொணர் தன்பதிவேடு, சிறப்பு பணிகள் தொடர்பான பதிவேடுகள், நீண்ட கால நிலுவையில் உள்ள அலுவலக கோப்புகள், பணியாளர் வருகை பதிவேடு, தற்செயல்விடுப்பு பதிவேடு, முதியோர் பாதுகாப்பு சட்டம் குறித்த கோப்புகள், இணையதள பதிவுகள் குறித்த பதிவேடு உள்ளிட்ட முக்கிய அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் ம.சதீஷ்குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) கே.சிவபிரகாசம், ஈரோடு வருவாய் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story