பெருந்துறை பாதாள சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு

பெருந்துறை பாதாள சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு

பெருந்துறை பாதாள சாக்கடை திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு செய்தார்.

பெருந்துறை பனிக்கம்பாளையம் பாதாள சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு செய்தார்.

பெருந்துறை பனிக்கம்பாளையத்தில் அமைந்துள்ள பாதாள சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா திங்கட்கிழமை (இன்று) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிறப்பு நிலை பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில், பெருந்துறை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.54.78 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பட்டு வருகின்றது.


இத்திட்டத்தின் கீழ் பனிக்கம்பாளையத்தில் அமைந்துள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். மேலும் இந்த சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் பேரூராட்சி பகுதிகளில் அமைந்துள்ள 15 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளில் இருந்து, வெளியேறும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து குளோரின் கலவையுடன் விவசாய பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகின்றது.

அதேபோன்று, மனித கழிவுகளையும் உரமாக்கி விவசாய பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் பாதாள சாக்கடை திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் சிவகுமார், உதவி பொறியாளர் கீதா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) மணிகண்டன், பெருந்துறை பேரூராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், செயல் அலுவலர் கிறிஸ்டோபர் தாஸ் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story