ஈரோடு மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு: ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு: ஆட்சியர் ஆய்வு

ஈரோடு குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வினை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டத்தில் 27 மையங்களில் 4,967 பேர் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு எழுதினர். குமலன்குட்டை தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டத்தில் 27 மையங்களில் 4,967 பேர் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு எழுதினர். குமலன்குட்டை தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 1 தேர்வு தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் இன்று (13ம் தேதி) நடைபெற்றது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 27 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. ஈரோடு குமலன்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் நடைபெற்ற தேர்வினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெற்று வருவதையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் 27 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது.

இந்த தேர்விற்கென ஒரு பறக்கும் படை அலுவலரும், 27 ஆய்வு அலுவலர்களும், 5 நடமாடும் குழுக்களும் உட்பட காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட துறையினரும் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு பதவிகளுக்கான தேர்வினை எழுத 7,251 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 4,967 (68.50 சதவீதம்) பேர் தேர்வு எழுதினர். 2,284 (31.50 சதவீதம்) பேர் தேர்வு எழுத வருகை தரவில்லை.

மேலும், தேர்வு மையங்களில் தேவையான தடையில்லா மின்சாரம், கழிப்பறை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது என்று அவர் தெரிவித்தார்.

Tags

Next Story