ஈரோடு மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க 50 சதவீத மானியம்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா.
ஈரோடு மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க முன்வரும் தொழில்முனைவோருக்கு 50 சதவீதம் அரசு மானியம் வழங்கப்படும் என்று ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஜவுளித் துறையில் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றான தமிழகத்தில் இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கரில் குறைந்த பட்சம் 3 ஜவுளி உற்பத்தித் தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில் 50 சதவீதம் அல்லது ரூ. 2.50 கோடி. இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படும்.
எனவே, சிறியஅளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை அனைத்து மாவட்டங்களிலும் பயன்படுத்தி, தொழில்வளா்ச்சியை மேம்படுத்தவும் வேலைவாய்ப்புகளை பெருக்கவும் அனைத்துத் தொழில் முனைவோரும் முன்வர வேண்டும். இதுதொடா்பாக ஆலோசிக்கும் பொருட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 28ம் தேதி மாலை 4.30 மணியளவில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைத்தல் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் ஈரோடு மாவட்ட ஜவுளித் தொழில் முனைவோர்களுடன் நடைபெற உள்ளது.
இத்திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு மண்டல துணை இயக்குநர், துணிநூல் துறை, சேலம் அலுவலகம், 1A-2/1, சங்ககிரி மெயின்ரோடு, குகை, சேலம் - 636 006 என்ற முகவரியிலோ அல்லது 0427-2913006 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu