ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் தேங்காய் சுட்டு மாணவிகள் கொண்டாட்டம்
ஆடி மாத பிறப்பை கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேங்காய் சுட்டு கொண்டாடிய போது எடுத்த படம்.
ஆடி மாத பிறப்பை ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேங்காய் சுட்டு கொண்டாடினர்.
ஈரோடு மாவட்டத்தில் ஆடி பண்டிகை என்பது மிகச்சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். ஆடி மாதத்தை வரவேற்கும் விதமாக ஆடி முதல் நாள் தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, ஆடி முதல் நாளான இன்று (17ம் தேதி) கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேங்காய் சுட்டு ஆடியை வரவேற்றனர்.
ஆடி மாதம், அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் இம்மாதம் முழுவதுமே பண்டிகை கொண்டாட்டமாக இருக்கும். ஆடி மாதப் பிறப்பினை, தேங்காய் சுட்டு கொண்டாடும் வழக்கம் சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி மாவட்டங்களில் உள்ளது. மகாபாரத யுத்தம் தொடங்கிய நாளான ஆடி 1ம் தேதி தர்மம் வென்றிட வேண்டி, விநாயகர் மற்றும் குலதெய்வங்களுக்கு, தேங்காய் சுட்டு படையலிட்டு வழிபாடு நடத்துவர். இதன் அடிப்படையில், தேங்காய் சுடும் பண்டிகை கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவியர் விடுதியில் கொண்டாடப்பட்டது.
பிறந்தது ஆடி! உங்க நாயகர்களின் வாழ்க்கை எப்படி அமையும்?
தேங்காயில் உள்ள நார்களை எடுத்து, தேங்காயின் கண் பகுதி என்று சொல்லக்கூடிய மேல் பகுதியில் ஒரு சிறு துளையிட்டு அதில் உள்ள நீரை தனியாக பிரித்தெடுத்து விட்டு, பின்பு வெள்ளம், நாட்டுச் சர்க்கரை, பச்சரிசி, பாசிப்பருப்பு, முந்திரி மற்றும் பல பொருட்கள் அதோடு சேர்த்து, தேங்காயை உட்பகுதியில் செலுத்தி பின்பு அதனை நெருப்பில் சுட்டு மாணவியர் ஆடிப்பண்டிகையை அனைவரும் ஒன்றுகூடி மகிழ்ச்சியாக வரவேற்றனர்.
மேலும், பருவகால மாற்றம் ஏற்படும் ஆடி மாதத்தில், தீயில் சுடப்பட்ட தேங்காய் சாப்பிடுவதன் மூலம் உடலில் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு, ஆரோக்கியம் பெருகும் என்ற முன்னோர்களின் பாரம்பரியத்தை, மாணவிகள் கடைபிடித்து, உற்சாகம் பொங்க விடுதியில் ஆடிப் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
ரஜினியுடன் மோதும் சிவகார்த்திகேயன்! அமரன் ரிலீஸ் தேதி தெரியுமா?
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu