ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கு வழிகாட்டும் பயிற்சி வகுப்பு

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கு வழிகாட்டும் பயிற்சி வகுப்பு
X

கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பயிற்சி வகுப்பில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் கடந்த 6 நாட்கள் முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்களுக்கு வழிகாட்டும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் கடந்த 6 நாட்கள் முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்களுக்கு வழிகாட்டும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் உள் தர உறுதிக் கட்டமைப்பின் (ஐயுஏசி) சார்பில் கடந்த 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை அனைத்து முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.


கடந்த 1ம் தேதி தொடங்கிய முதல் நாள் வழிகாட்டும் பயிற்சி வகுப்பினை கல்லூரியின் தாளாளர் பி.டி.தங்கவேல் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கல்லூரியின் முதல்வர் எச்.வாசுதேவன் மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வியின் அவசியம் மற்றும் கல்லூரியில் உள்ள நூலகம் ஆய்வுக்கூடங்களை எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது என்பது குறித்தும், அனைத்துத் துறைத் தலைவர்களும் தங்கள் துறை செயல்பாடுகள், துறையின் சிறப்பு அம்சங்கள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

2ம் தேதி நடைபெற 2ம் நாள் பயிற்சி வகுப்பில் எழுத்தாளர் மற்றும் தன்னம்பிக்கைப் பேச்சாளர் ஈரோடு கதிர் கலந்து கொண்டு மனித ஆற்றலின் சிறப்பு, தன்னம்பிக்கை, நேர்மறையான எண்ணங்கள் போன்றவற்றைப் பற்றி உரையாற்றினார். அதனையடுத்து, அனைத்து முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்களுக்கும் சித்தோடு யோகா பயிற்சியாளர் ஏ.சொக்கலிங்கம் யோகா பயிற்சியையும், லதா சுரேஷ் ஜூம்பா நடன உடற்பயிற்சியையும் கற்பித்தனர்.


3ம் தேதி நடைபெற்ற 3ம் நாள் வகுப்பில் ஈரோடு பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலய அமைப்பின் பி.கே.சுசீலா மற்றும் என்.சித்ரா கலந்துகொண்டு 'மனித மாண்புகளும் உள்ளார்ந்த திறன்களும்' எனும் தலைப்பில் பேசினார். தேசிய மாணவர் படையின் நோக்கம். பயன் போன்றவற்றை மாணவ மாணவியர்களுக்கு கல்லூரியின் தேசிய மாணவர் படையின் கேப்டன் எடுத்துரைத்தார்.

4ம் தேதி நடைபெற்ற 4ம் நாள் வகுப்பில் பெருந்துறை கொங்கு இயற்கை மற்றும் யோகா மருந்துவக் கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் எஸ்.வி.ராஜரத்தினம், டாக்டர் தனுஷியா, டாக்டர் எஸ்.தீபிகா ஆகியோர் கலந்து கொண்டு யோகாவின் பயன்கள் மற்றும் இயற்கை மருத்துவத்தின் சிறப்புகளை மாணவ, மாணவிகளுக்கு எடுத்துக் கூறினர். இலக்கிய மன்றங்கள், இலக்கியத்தின் சிறப்புகள், மொழியின் முக்கியத்துவம் குறித்து கல்லூரியின் மூத்த பேராசிரியர்கள் எடுத்துரைத்தனர்.


5ம் தேதி நடைபெற்ற 5ம் நாள் பயிற்சி வகுப்பில் கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புத் துறை அலுவலர் மாணவ மாணவிகளுக்கு ஒவ்வொரு துறையிலும் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றியும், அரசுப் பணிக்கு மாணவர்கள் எவ்வாறு தங்களை தயார் படுத்திக்கொள்வது என்பது பற்றியும், கல்லூரியின் நூலகர் நூலகப் பயன்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து, முதலாம் ஆண்டு மாணவ மாணவியர்கள் அவரவர் துறைக்கேற்ப அறிவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியலில் செயல்படும் மாதிரிகள் பற்றிய கண்காட்சிகளைக் கொண்ட ஈரோடு ஸ்டெம் பூங்கா, பெருந்துறை சிப்காட்டில் அமைந்துள்ள கே.ஜி. ஃபேப்ரிக்ஸ், ஷாஹி எக்ஸ்போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கும் மற்றும் ஈரோட்டில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த ஜவுளி சந்தை 'டெக்ஸ்வேலி'க்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.


6ம் தேதி நடைபெற்ற 6ம் நாள் பயிற்சி வகுப்பில் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வுக் காணொளியும், கல்லூரிகளில் செயல்பட்டு வரும் பல்வேறு மன்றங்கள், அமைப்புகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்த காணொளியும் காண்பிக்கப்பட்டன. இணைய வழி கல்வியான ஸ்வயம் கல்லூரியின் நுண்கலை மன்றம், கல்வி உதவித்தொகை மற்றும் மதிப்புக் கூட்டு வகுப்புகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை கல்லூரியின் மூத்த பேராசிரியர்கள் எடுத்துரைத்தனர்.

இதனையடுத்து, தீக்ஷாரம்ப் வழிகாட்டுதல் பயிற்சி வகுப்புகளின் நிறைவு விழா நடைபெற்றது. ஆறு நாட்கள் நடைபெற்ற தீக்ஷாரம்ப் வழிகாட்டுதல் பயிற்சி வகுப்புகளின் ஆய்வறிக்கையை கல்லூரியின் உள் தர உறுதிக் கட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே.கே.ஏ.அழகுஅப்பன் வாசித்தார். இதில், கல்லூரியின் வணிகவியல் துறைத்தலைவர் கே.எம்.குமரகுரு விழா நிறைவுரையாற்றினார்.


மேலும், இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முடிவில் இந்தி மற்றும் பிற மொழிகள் துறையின் தலைவர் வி.அன்புமணி நன்றியுரை ஆற்றினார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உள் தர உறுதிக் கட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே.கே.ஏ.அழகுஅப்பன், இந்தி மற்றும் பிற மொழிகள் துறைத் தலைவர் வி.அன்புமணி, கணிதத் துறையின் இணைப் பேராசிரியர் எஸ்.சுரேஷ் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story
நைட்ல இதெல்லாம் சாப்பிட கூடாதா...? அச்சச்சோ !.. இது தெரியாம இருந்துடீங்களே !