ஈரோட்டில் வரும் 13ம் தேதி கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் குறைதீர் முகாம்
கூட்டுறவு பணியாளர்கள் குறைதீர் முகாம் (பைல் படம்).
ஈரோடு மண்டல கூட்டுறவு பணியாளர்களுக்கு, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமைக் கூட்ட அரங்கில் வரும் 13 காலை 10.30 மணிக்கு குறைதீர் முகாம் நடக்க உள்ளது.
2024 -2005ம் ஆண்டு கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கையின் போது, கூட்டுறவுத் துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பின் படி, ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வகை கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி வரும் பணியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கான பணி தொடர்பாகவும், பணியின்போது அல்லது வேறு வகையிலும் ஏற்படும் குறைகளை பகிர்ந்திடவும், அக்குறைகளை விதிகளுக்குட்பட்டு தீர்வு செய்திடும் வகையில் பணியாளர் நாள் முகாம் நடத்தப்பட உள்ளது.
அதன்படி, வருகிற 13ம் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைமையக கூட்ட அரங்கில் வைத்து ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மற்றும் ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது.
இதில், பணியாளர்கள் பணி தொடர்பாகவும் பணியின் போதும் அல்லது வேறு வகையிலும் ஏற்படும் குறைகள் தொடர்பாக பணியாளர் நாள் முகாமில் மனுக்களை அளிக்கலாம் என ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க.ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu