10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவக்கம்: ஈரோடு மாவட்டத்தில் தேர்வெழுதும் 26,822 பேர்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவக்கம்: ஈரோடு மாவட்டத்தில் தேர்வெழுதும் 26,822 பேர்
X

அரசுத் தேர்வுகள் இயக்ககம்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று (மார்ச் 26) துவங்கும் நிலையில், ஈரோடு மாவட்டத்தில் 116 மையங்களில் 26 ஆயிரத்து 822 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று (மார்ச் 26) துவங்கும் நிலையில், ஈரோடு மாவட்டத்தில் 116 மையங்களில் 26 ஆயிரத்து 822 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழகத்தில், 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கடந்த, 1ம் தேதி தொடங்கி, 22ம் தேதி நிறைவடைந்தது. அதே போல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த மாதம், 4ம் தேதி தொங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து இன்று (26ம் தேதி) செவ்வாய்க்கிழமை முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொங்கி, வருகின்ற ஏப்ரல் மாதம், 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த தேர்வை ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் படிக்கும் 25 ஆயிரத்து 663 மாணவ, மாணவிகளும், தனித்தேர்வர்கள் 1,159 பேரும் என மொத்தம் 26 ஆயிரத்து 822 பேர் எழுதுகின்றனர். இவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக ஈரோடு மாவட்டத்தில் 116 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான வினாத்தாள்கள் கடந்த 19ம் தேதி, மாவட்டத்தில் உள்ள 7 கட்டு காப்பு மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, அறையில் வைத்து பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் அந்த மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!