ஈரோட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் கோலப்போட்டி
முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கோலப்போட்டி நடைபெற்றது.
தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது 71வது பிறந்தநாளை வெள்ளிக்கிழமை (நேற்று) கொண்டாடினர். அவரது பிறந்தநாளை பல்வேறு பகுதிகளில் உள்ள திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கொண்டாடினர்.
அதன் ஒரு பகுதியாக, ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோலப்போட்டி நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது வீட்டு முன்பு பலவிதமான கோலங்கள் போட்டு அசத்தினர்.
கோலப்போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு முதல் பரிசாக ரூ.2,000 மதிப்புள்ள பட்டுப் புடவையும், இரண்டாவது பரிசாக இரண்டு பேருக்கு ரூ.1,200 மதிப்புள்ள புடவைகளும் வழங்கப்பட்டன. மேலும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதன்பிறகு, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வீரப்பன்சத்திரம் பகுதி திமுக செயலாளர் நடராஜன் தலைமையில் நடந்த இந்த விழாவை வீரப்பன்சத்திரம் முன்னாள் நகர மன்ற தலைவரும், ஈரோடு மாநகராட்சி கவுன்சிலருமான மல்லிகா நடராஜன் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu