முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள்: ஈரோட்டில் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கி கொண்டாட்டம்

Erode news- முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, ஈரோடு சோலாரில் உள்ள முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.
Erode news, Erode news today- தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, ஈரோட்டில் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 71வது பிறந்தநாள் விழா தமிழகமெங்கும் திமுக சார்பில் இளைஞர் எழுச்சி நாளாக இன்று கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சரும், ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான முத்துசாமி மற்றும் திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பிரகாஷ் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில், ஈரோடு சோலார் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அட்சயம் அறக்கட்டளையில் தங்கியுள்ள ஆதரவற்ற 40க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு மதிய உணவாக சிக்கன் பிரியாணி மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
ஈரோடு இளைஞர் அணி நிர்வாகி முகமது அர்ஷத்கான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், திமுக மாணவர் அணி அமைப்பாளர் அறச்சலூர் மகேஷ் , அயூப் கான், முபாரக் அலி, பெனாசீர் ரிஜ்வானா, ஷர்மிளா பானு, ஹக்கீம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu