கோபிசெட்டிபாளையம் அருகே நில மோசடி புகாரில் தலைமை காவலர் தற்காலிக பணிநீக்கம்
தலைமை காவலர் வைரநாதன்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கடத்தூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணி புரிந்து வந்த வைரநாதன் (42) புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்திற்கு பணி மாறுதலில் வந்தார். சில மாதத்துக்கு முன் கோபி அயலூரை சேர்ந்த கந்தசாமி, மாரப்பன் ஆகியோரின் 13 சென்ட் நிலத்திற்கான பத்திரத்தை அடமானமாக வைரநாதனிடம் வைத்துள்ளனர். வேறு கையெழுத்து என கூறி கந்தசாமி, மாரப்பனை சார் பதிவாளர் அலுவலகம் அழைத்துச் சென்று அவர்களின் நிலத்தையே தன் பெயருக்கு எழுதி வாங்கி வைரநாதன் மோசடி செய்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக கந்தசாமி, மாரப்பன் ஆகியோர் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு புகார் அனுப்பினர். இது தொடர்பாக உடனடியாக நம்பியூர் இன்ஸ்பெக்டர் நிர்மலா விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை, தொடர்ந்து கடந்த 21ம் தேதி விசாரணை நடந்தது. அப்போது, விசாரணைக்கு ஒத்துழைக்காத வைரநாதன், காவல்துறையினர் தன்னை மிரட்டி எழுதி வாங்குவதாக கூறி தகராறு செய்துள்ளார். இது குறித்து இன்ஸ்பெக்டர் நிர்மலா ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனுக்கு அறிக்கை அளித்தார். அதைத்தொடர்ந்து ஏட்டு வைரநாதனை சஸ்பெண்ட் செய்து எஸ்பி சசிமோகன் உத்தரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu