பவானியில் நாளை (டிச.5) முதல் டிச.8ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம்
பவானியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் (பைல் படம்).
பவானி செல்லியாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை முதல் டிச.8ம் தேதி வரை பவானி நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள செல்லியாண்டியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை (டிச.5) முதல் டிச.8ம் தேதி வரை பவானி நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மேட்டூரில் இருந்து ஈரோடு செல்லும் அனைத்து வாகனங்களும் பவானி புதிய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள புது பாலம் வழியாக வெளியே செல்ல வேண்டும். கோயிலுக்கு வரும் 4 சக்கர வாகனங்கள் அனைத்தும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நிறுத்த வேண்டும்.
கோயிலுக்கு வரும் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் தேர் வீதியில் உள்ள கான்கிரீட் ரோட்டின் இடதுபுறமாக நிறுத்த வேண்டும். 4 சக்கர வாகனங்களை பண்டாரபுச்சி கோயில் முன்புறமுள்ள காலி இடத்தில் நிறுத்த வேண்டும்.
அந்தியூர் மற்றும் ஆப்பக்கூடல் சாலை வழியாக ஈரோடு, கோவை மற்றும் சேலம் செல்லும் அனைத்து வாகனங்களும் தளவாய்ப்பேட்டை வழியாக காளிங்கராயன்பாளையம் செல்ல வேண்டும்.
ஈரோடு, கோவை மற்றும் சேலம் ஆகிய ஊர்களில் இருந்து பவானி நகருக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் குமாரபாளையத்தின் வழியாக பவானி நகருக்குள் வந்து மேட்டூர் ரோட்டில் செல்ல வேண்டும்.
கோயிலுக்கு வரும் 4 சக்கர வாகனங்கள் சங்கமேஸ்வரர் கோயில் ஆர்ச் வழியாக கோயில் வளாகத்திலும், மேலும், அதிகப்படியான வாகனங்கள் வந்தால்க காளிங்கராயன்பாளையம் மாரியம்மன் கோயில் எதிரில் உள்ள காலி இடத்தில் நிறுத்த வேண்டும் என்று பவானி போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu