பவானி அருகே பால் வாங்க சென்ற பெண்ணிடம் 7 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு..!

நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு (பைல் படம்).
Bhavani Chain Snatching
பவானி அருகே பால் வாங்க நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடுகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ராணா நகரைச் சேர்ந்தவர் சின்னய்யன். இவரது மனைவி வேதாம்பாள் (வயது 65). சம்பவத்தன்று மாலை இவர் கவுண்டர் நகர் அருகே உள்ள கடையில் பால் வாங்கிக் கொண்டு பவானி - மேட்டூர் சாலையில் வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அங்குள்ள பழக்கடை சந்து வழியாக சென்ற போது பின்னால் வந்த நபருக்கு வழி விடுவதற்காக ஒதுங்கி நின்றார். அப்போது, பின்னால் வந்த மர்ம நபர் வேதாம்பாள் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினார். இதனால், அதிர்ச்சி அடைந்த வேதாம்பாள் கூக்குரல் எழுப்பினார்.
அப்பகுதியினர் வந்து தேடிப் பார்க்கையில் மர்ம நபர் மேட்டூர் ரோடு வழியாக தப்பி ஓடியது தெரிய வந்தது. இதுகுறித்து வேதாம்பாள் பவானி போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu