ஈரோடு கிழக்கில் இதுவரை ரூ.61.70 லட்சம் மதிப்பு ரொக்கம், பொருட்கள் பறிமுதல்
ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் கட்டுப்பாட்டு அறை (பைல் படம்).
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மூத்த மகன் திருமகன் ஈவெரா. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த இவர் கடந்த ஜன.4-ம் தேதி மாரடைப்பால் காலமானார். இதைத் தொடர்ந்து, அத்தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது. இந்த நிலையில், மேகாலயா உள்ளிட்ட 3 மாநில தேர்தல் அறிவிப்புடன், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலையும் இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 18-ம் தேதி அறிவித்தது. அதன்படி, பிப்.27-ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்க உள்ளது.
இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த மாதம் 18-ம் தேதி அமலுக்கு வந்தது. அதனைத்தொடர்ந்து ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் ரொக்க பணம், ரூ.10 ஆயிரத்திற்கும் மேல் பரிசுப்பொருட்கள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு என, 4 நிலை கண்காணிப்பு குழுவினர், 3 பறக்கும் படையினர் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில், வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மாதம் 20-ம் தேதி முதல் இன்று (திங்கட்கிழமை) பிப்.20 வரை, உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரொக்கம் ரூ.51 லட்சத்து 31 ஆயிரத்து 590 பறிமுதல் செய்யப்பட்டு, மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மேலும் ரூ. 9 லட்சத்து 5 ஆயிரத்து 360 மதிப்பிலான 1251.200 லிட்டர் மதுபானம், ரூ.81 ஆயிரத்து 150 மதிப்பிலான 30.6305 கிராம் கஞ்சா, ரூ.52,062 மதிப்பிலான புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதுவரை, பணம் மற்றும் பிற பொருட்கள் என ரூ.61 லட்சத்து 70 ஆயிரத்து 162 மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu