டாஸ்மாக் விற்பனையாளரை வெட்டிய இருவர் மீது வழக்குப்பதிவு

டாஸ்மாக் விற்பனையாளரை வெட்டிய இருவர் மீது வழக்குப்பதிவு
X

பைல் படம்.

கோபிச்செட்டிப்பாளையம் அருகே டாஸ்மாக் விற்பனையாளரை, அரிவாளால் வெட்டிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோபிச்செட்டிப்பாளையம் கடத்தூர் அருகே இடையான்குட்டையில் உள்ள டாஸ்மாக் கடையில் மணிகண்டன் என்பவர் விற்பனையாளராக உள்ளார். இவர் கடந்த டிசம்பர் 15-ம் தேதி பணி முடிந்து சிவக்குமார் என்பவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள், மணிகண்டனை வழிமறித்து, தகாத வார்த்தையால் பேசி அரிவாளால் வெட்டினர். பின், சிவக்குமாரையும் தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின்படி, கூடக்கரை பகுதியை சேர்ந்த பழனிசாமி, அன்பழகன் ஆகியோர் மீது, கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!