கவுந்தப்பாடி பகுதியில் சேவல் பந்தயத்தில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு

கவுந்தப்பாடி பகுதியில் சேவல் பந்தயத்தில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு
X

பைல் படம்.

கவுந்தப்பாடி அருகே அனுமதியின்றி சேவல் பந்தயத்தில் ஈடுபட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட சேவாகவுண்டனூர் பகுதியில் அனுமதியின்றி சேவல் பந்தயம் நடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் சென்றபோது சேவல் பந்தயத்தில், ஈடுபட்ட ஊத்துக்காடு பகுதியை சேர்ந்த சதீஷ், சித்தோடு பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன், சேவாகவுண்டனூர் பகுதியை சேர்ந்த தங்கதுரை, ஆர்என்புதூர் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி , பெரிய புலியூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்