அம்மாபேட்டை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேர் மீது வழக்குப்பதிவு

அம்மாபேட்டை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேர் மீது வழக்குப்பதிவு
X

பைல் படம்.

அம்மாபேட்டை பகுதியில் இருவேறு இடங்களில் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் இன்று வழக்கமான ரோந்து பணிகளில் ஈடுபட்டார். அப்போது பூதப்பாடி பகுதியில் அரசின் மது பாட்டில்களை சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த வின்சென்ட் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரிடம் இருந்து 5 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல், மூஞ்சவாடி பகுதியில் ஊமாரெட்டியூர் பகுதியை சேர்ந்த சின்னப்பன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!