கொடுமுடி அருகே ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

கொடுமுடி அருகே ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
X

பைல் படம்.

கொடுமுடி அருகே ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய 2 வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஊஞ்சலூர் அருகே உள்ள கொளத்துப்பாளையம் ஊராட்சி மன்ற ‌தலைவராக இருப்பவர் ராஜ்குமார். இவர் மோட்டார் சைக்கிளில் ஈரோடு-கரூர் ரோட்டில் ஆராம்பாளையம் பிரிவு என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ராஜ்குமாரின் மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றுள்ளார்கள். அப்போது அவர்கள் தகாத வார்த்தையால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ராஜ்குமார் அவர்களை நாடார் காலனி என்ற இடத்தில் துரத்தி வழிமறித்து ஏன் திட்டினீர்கள்? என்று தட்டிக்கேட் டுள்ளார்.

அப்போது வாலிபர்கள் இருவரும் சேர்ந்து ராஜ்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்து 2 வாலிபர்களுக்கும் தர்ம அடி கொடுத்தார்கள். பின்னர் நெடுஞ்சாலை ரோந்து போலீசாரை வரவழைத்து கொடுமுடி போலீசாரிடம் ஒப்படைத்தார்கள். போலீசார் விசாரித்தபோது அவர்கள் இருவரும் குள்ளக்கவுண்டன்புதூரை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்