அந்தியூர் அருகே சரக்கு வாகனம் மரத்தில் மோதி விபத்து: 19 பேர் காயம்; எம்எல்ஏ நேரில் ஆறுதல்

அந்தியூர் அருகே சரக்கு வாகனம் மரத்தில் மோதி விபத்து: 19 பேர் காயம்; எம்எல்ஏ நேரில் ஆறுதல்

விபத்தில் காயமடைந்து அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளிகளை அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சரக்கு வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் படுகாயமடைந்த கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளர்களை ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அந்தியூர் அருகே சரக்கு வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் படுகாயமடைந்த கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளர்களை ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் மற்றும் கோவிலூரைச் சேர்ந்த சுமார் 15க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் விராலிக்காட்டூர் பகுதியில் இருந்து கிருஷ்ணாபுரம் பகுதிக்கு கரும்பு வெட்டுவதற்காக ஒரு சரக்கு வாகனத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்றனர்.


அந்த சரக்கு வாகனம் எண்ணமங்கலம் - மூலக்கடை செல்லும் சாலையில் ஆலயங்கரட்டில் உள்ள குச்சிக்கிழங்கு மில் அருகே வந்த போது, திடீரென சரக்கு வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தென்னை மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சரக்கு வாகனத்தில் பயணம் செய்த 19 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த வெள்ளித்திருப்பூர் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு வைத்தனர். பின்னர், இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில், 15க்கும் மேற்பட்ட கரும்பு வெட்டும் தொழிலாளிகள் படுகாயமடைந்ததை அறிந்த அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அப்போது, அந்தியூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் கஸ்தூரி, சிபிஎம் தாலுக்கா செயலாளர் முருகேசன், காங்கிரஸ் கட்சி முன்னாள் வட்டார தலைவர் நாகராஜா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். இந்த சம்பவம் அந்தியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
Similar Posts
கணவர் ரன்பீர் கபூரை உளவு பார்த்த ஆலியா பட்: இந்தி பட உலகில் நடந்த சுவாரஸ்யம்
பரிதாபத்தின் உச்சத்தில்  உலகின் வளமான நாடு: போரால் அகதிகளாக மாறும் மக்கள்
இதயத்தின் கதவுகள் திறந்தன: பிடனுடன் சந்திப்பு குறித்து பிரதமர் மோடி
ஜம்முவில் இருந்து வந்த ரயிலில் வெடித்த பட்டாசு: சதி திட்டத்தில் ஊழியர்கள்?
திருப்பதி லட்டு விவகாரத்தில் மோடிக்கு கடிதம் எழுதிய ஜெகன் மோகன் ரெட்டி
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரியில் 24வது பட்டமளிப்பு விழா
கோபி அருகே கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திருட்டு: அதிகாரிகள் எச்சரிக்கை
காணாமல் போன 10,20,50 ரூபாய் நோட்டுகள்: நிதியமைச்சருக்கு  காங்கிரஸ் கடிதம்
ஈரோட்டில் சலுகை விலையில் ஜவுளி வாங்க  குவிந்த இளைஞர்களால் தள்ளுமுள்ளு..!
நம்பியூரில் அரசுப் பள்ளி அருகே தனியார் மதுபானக்கடை: காங்., கட்சி ஆர்ப்பாட்டம்
அந்தியூர் அருகே சரக்கு வாகனம் மரத்தில் மோதி விபத்து: 19 பேர் காயம்; எம்எல்ஏ நேரில் ஆறுதல்
கரும்பு டன்னுக்கு ரூ.5,500 வழங்க வலியுறுத்தி அக்.15ல் சென்னை கோட்டை முற்றுகை
அந்தியூர் அருகே அத்தாணி கடையில் தேங்காய்பால் குடித்த தமிழிசை சவுந்தரராஜன்