சித்தோடு அருகே காரும்-லாரியும் நேருக்கு நேர் மோதல்: ஒருவர் உயிரிழப்பு

சித்தோடு அருகே காரும்-லாரியும் நேருக்கு நேர் மோதல்: ஒருவர் உயிரிழப்பு
X

சித்தோடு அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

சித்தோடு அருகே காரும்-லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு கன்னிப்பட்டியை சேர்ந்தவர் பச்சியப்பன் (46). இவர் தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறை டிரைவர் ஆவார். இந்த நிலையில், இன்று சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சேலம் நெடுஞ்சாலைத்துறை மேற்பார்வைபொறியாளர் சுரேஷ் என்பவருடன் சைலோ காரில் கோவையை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, ஈரோடு மாவட்டம், நசியனூர் அப்பாத்தால்கோயில் ஜங்ஷன் அருகே சென்ற போது, சாலை புதுப்பிக்கும் பணிகள் காரணமாக ஒரு வழி சாலையாக மாற்றப்பட்ட நிலையில், எதிரே பல்லடத்தில் இருந்து சங்ககிரி நோக்கி வந்து கொண்டிருந்த லாரி மீது கார் நேருக்கு நேர் மோதியது. இதில் பச்சியப்பன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த சித்தோடு போலீசார் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பச்சியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, படுகாயமடைந்த நெடுஞ்சாலைத்துறை மேற்பார்வைபொறியாளர் சுரேஷை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்டு சித்தோடு போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!