கோபிசெட்டிபாளையம் அருகே 4 பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

கோபிசெட்டிபாளையம் அருகே 4 பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து
X

விபத்துக்குள்ளான கார்

கோபிசெட்டிபாளையம் அருகே 4 வழிச்சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் ஈரோடு - கோபிசெட்டிபாளையம் வரை சுமார் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலை பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பல இடங்களில் மழைநீர் செல்வதற்காக, பள்ளம் தோண்டப்பட்டு பாலம் கட்டும் பணிகளுக்கும் நடைபெற்று வருகிறது.

அவ்வகையில், கோபி தாசம்பாளையம் பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. அந்த இடத்தில் எச்சரிக்கை பலகைகளை ஒப்பந்ததாரர்கள் வைக்காமல் சென்றுள்ளனர். இந்த நிலையில், நேற்றிரவு ஈரோட்டில் இருந்து கோபி நோக்கி வந்த கார் 10அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், காரில் இருந்த ஏர் பேக்குகள் விரிவடைந்ததில், காரில் வந்த இரண்டு பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!