திருப்பூர் அருகே கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு

திருப்பூர் அருகே கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு
X

தீப்பற்றி எரிந்த கார். 

திருப்பூர் அருகே, கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதில், யாருக்கும் பாதிப்பில்லை.

ஈரோடு மாவட்டம் நம்பியூரை சேர்ந்தவர் குமார் (வயது 37). இவர் இன்று காலை, திருப்பூர் பி.என்.ரோடு மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் துணிகளை தைக்க ஆர்டர் கொடுத்து விட்டு, காரில் நம்பியூருக்கு புறப்பட்டுள்ளார். திருப்பூர் கூத்தம்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென காரில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்து குமார் அதிர்ச்சியடைந்து, சாலையோரம் நிறுத்தி விட்டு காரில் இருந்து இறங்கி தப்பினார்.

சிறிது நேரத்திற்குள் கார் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. மேலும், காரில் சிலிண்டர் பொருத்தப்பட்டிருந்ததால், அப்பகுதி பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். இது குறித்து, திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள், காரில் பற்றிய தீயை போராடி அணைத்தனர். இருப்பினும், கார் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. எனினும் யாருக்கும் பாதிப்பு இல்லை. இது குறித்து, திருமுருகன்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
crop opportunities ai agriculture