கோபி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதல்: தம்பதி பரிதாப உயிரிழப்பு

கோபி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதல்: தம்பதி பரிதாப உயிரிழப்பு
X

விபத்தில் கார் தலைகீழாக கவிழ்த்து கிடப்பதையும், இருசக்கர வாகனத்தையும் படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த டி.என்.பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி வளைவு அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் கணவன் - மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோபி அடுத்த டி.என்.பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி வளைவு அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் கணவன் - மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகேயுள்ள அக்கரை தத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 58). கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜோதிமணி (வயது 48). கணவன் மனைவி இருவரும் கள்ளிப்பட்டி அருகேயுள்ள கொண்டையம்பாளையத்தில் உறவினர் குழந்தைக்கு தொட்டில் கட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மொபட்டில் நேற்று காலையில் சென்றுள்ளனர். நிகழ்ச்சி முடிந்த பிறகு ஆறுமுகமும், அவரது மனைவி ஜோதிமணியும் இருசக்கர வாகனத்தில் வீடு திருப்பிக் கொண்டு இருந்தனர்.

டி.என்.பாளையம் தனியார் கல்லூரி அருகேயுள்ள வளைவு ஒன்றை இருசக்கர வாகனம் கடந்து சென்ற போது, எதிரே அதே சாலையில் அந்தியூர் அருகேயுள்ள நகலூரைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் ஓட்டிச் சென்ற கார் ஆறுமுகம் சென்ற மொபட் மீது வேகமாக மோதியது. இதில், இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டு உடலில் இரத்த காயங்களுடன் படுகாயம் அடைந்த ஆறுமுகமும், ஜோதி மணியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் கார் சாலையோரம் தலைகீழாக கவிழ்ந்ததில், காரில் வந்த பழனிச்சாமி உட்பட காரில் வந்த மூன்று பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்தால் அத்தாணி-சத்தியமங்கலம் சாலையில் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த அந்தியூர் நகலூரைச் சேர்ந்த பழனிச்சாமி மீது பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!