ஈரோடு மாவட்டத்தில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள்
அந்தியூர் பேரூராட்சி 13வது வார்டில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் கலைச்செல்வி
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் பேரூராட்சி 13-வது வார்டு திமுக வேட்பாளர் சுகந்தி 341 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கலைச்செல்வி 342 வாக்குகள் பெற்று ஒரு ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதேபோல் பவானி நகராட்சி 2-வது வார்டு திமுக வேட்பாளர் மோகன்ராஜ் 435 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் விஜயகுமாரி 434 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார். திமுக வேட்பாளர் மோகன்ராஜ் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதேபோல், பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சி 5-வது வார்டு திமுக வேட்பாளர் சத்யமூர்த்தி 175 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் பழனிச்சாமி 174 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இதில் ஒரு ஒட்டு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சத்யமூர்த்தி வெற்றி பெற்றார்.
சத்தியமங்கலம் நகராட்சி 8-வது வார்டில் பாஜக வேட்பாளர் உமா 256 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து . போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கீர்த்தனா 255 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். ஒரு ஒட்டு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் உமா வெற்றி பெற்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu