ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் குடும்பத்துடன் பிரச்சாரம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் குடும்பத்துடன் பிரச்சாரம்
X

ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் மனைவி மக்களோடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் மனைவி மக்களோடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு 15 நாட்களே உள்ள நிலையில், தேர்தல்பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. காலை 6 மணிக்கு வீடு, வீடாகச் சென்று பிரச்சாரத்தை தொடங்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் 10 மணிவரை பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். தொடர்ந்து, தேர்தல் பணிமனையில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.

மதிய உணவுக்கு பின்னர், சிறிது நேரம் ஓய்வெடுக்கச் செல்லும் தலைவர்கள் மீண்டும் மாலை 4 மணிக்கு தொடங்கி, 10 மணி வரை பிரச்சாரத்தை தொடர்கின்றனர்.திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதராவாக வாக்கு சேகரிக்கும் பணியில் அமைச்சர்கள் களமிறங்கியுள்ளனர். அமைச்சர்கள் முத்துசாமி, கே.என்.நேரு, எ.வ.வேலு, சாமிநாதன், பெரியசாமி, செந்தில்பாலாஜி, செஞ்சி மஸ்தான் உள்ளிட்ட அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னத்திற்கு ஈரோடு பிராமண பெரிய அக்ரஹாரம் பெரிய பள்ளி வாசலில் ஜும்மா தொழுகைக்குப் பின் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் அவரது துணைவியார் சைதானி பீ மற்றும் காங்கிரஸ், திமுக நிர்வாகிகள் வாக்குகளை சேகரித்தனர்.

அப்போது அங்குள்ள இஸ்லாமியர்கள், அமைச்சரது குடும்பத்தாரை தங்களது வீடுகளுக்கு மகிழ்ச்சியுடன் அழைத்து சென்று உபசரித்தனர். இப்படி குடும்பத்தினருடன் யாரும் வாக்கு கேட்டதில்லை. நீங்கள் கேட்பதால் கை சின்னத்திற்கே நாங்கள் அனைவரும் வாக்களிப்போம் என உறுதி அளித்தனர்.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?