ஈரோடு கனரா வங்கி சார்பில் இலவச செல்போன் பழுது நீக்கும் பயிற்சி பெற அழைப்பு

ஈரோடு கனரா வங்கி சார்பில் இலவச செல்போன் பழுது நீக்கும் பயிற்சி பெற அழைப்பு
X

கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் செல்போன் பழுது நீக்கம் குறித்த பயிற்சி ஜூலை 3-ல் தொடங்குகிறது

இதுகுறித்து கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பில், இலவச செல்போன் பழுது நீக்கம் செய்யும் பயிற்சி, (Free Cellphone Repairs & Service) வருகிற ஜூலை 3-ம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 7-ம் தேதி வரை 30 நாட்கள் நடைபெற உள்ளது.

ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது, சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்திலுள்ள கிராமப்புற பகுதிகளை சேர்ந்தவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

மேலும், 18 வயதிற்கு மேல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் அல்லது நூறு நாள் வேலைத் திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

இதில், சேர் விரும்புவோர் கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம் 2-ம் தளம், கொல்லம்பாளையம், பைபாஸ் ரோடு ஈரோடு - 638002 என்ற முகவரியில் நேரில் கொள்ளவும். கூடுதல் தகவல்களுக்கு 8778323213, 7200650604, 0424-2400338 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : கர்நாடகா பெண் வேட்பு மனு ஏற்கப்பட்ட சர்ச்சையால்,  பட்டியல் வெளியிட தாமதம்