ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் ரத்த தான முகாம்..!

ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் ரத்த தான முகாம்..!
X

ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ரத்த தான முகாமில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரத்த தான முகாம் நடந்தது.

Erode Arts and Science College Blood Donation Camp

Erode News , Erode Today News, Erode Live: ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரத்த தான முகாம் நடந்தது.

ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளம் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு நிறுவன தலைவர் வி.ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். கல்லூரியின் தாளாளர் கே.கே.பாலுசாமி முகாமை தொடங்கி வைத்தார். ஒவ்வொரு பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட மொத்தம் 51 பேர் ரத்த தானம் செய்தனர்.

முகாமில் நிறுவன பொருளாளர் டாக்டர் ஏ.விஜயகுமார், கல்லூரியின் முதல்வர் சங்கர சுப்பிரமணியன், இயக்குனர் வெங்கடாசலம் உள்பட பலர் கலந்துகொண்டனர். முகாமுக்கான ஏற்பாடு களை இளம் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர்கள் மோகனபிரியா, பி.சத்யா, செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் வி.சத்யா, திருவருட்செல்வி ஆகியோர் செய்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!