ஈரோட்டில் பிரியாணிபாளையம் புதிய கிளை திறப்பு

ஈரோட்டில் பிரியாணிபாளையம் புதிய கிளை திறப்பு
X

ஈரோடு குமலன்குட்டையில் பிரியாணிபாளையம் கடையின் புதிய கிளை திறப்பு விழாவில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு குமலன்குட்டையில் பிரியாணிபாளையம் கடையின் புதிய கிளை திறக்கப்பட்டது.

ஈரோடு குமலன்குட்டையில் பிரியாணிபாளையம் கடையின் புதிய கிளை திறக்கப்பட்டது.

ஈரோட்டின் பிரபல பிரியாணிபாளையம் கடையின் புதிய கிளையின் திறப்பு விழா குமலன்குட்டை பேருந்து நிறுத்தம் அருகில் நேற்று (1ம் தேதி) நடந்தது. இந்த விழாவில் , கடையின் நிர்வாக இயக்குனர் நயீம் கான் வரவேற்றார். யூஆர்சி கன்ஸ்ட்ரக்சன் இயக்குனர் சி.தேவராஜன் கலந்து கொண்டு கிளையை துவங்கி வைத்தார்.

செல்வா சேரிடபுள் டிரஸ்ட் நிறுவனர் ஜே.ஜே.பாரதி முதல் விற்பனை துவங்கி வைத்தார். அக்னி ஸ்டில்ஸ் நிர்வாக இயக்குனர் எம்.சின்னசாமி முதல் விற்பனை பெற்றுக் கொண்டார். சிட்டி ஹாஸ்பிடல் நிர்வாகி டாக்டர்.அபுல் ஹசன் முதல் தளத்தை துவங்கி வைத்தார்.


முக்கிய சமையலறையை எம்சிஆர் டெக்ஸ்டைல்ஸ் நிர்வாக இயக்குனர் எம்.சி.ராபின் துவங்கி வைத்தார். டைனிங் ஏரியாவை சுதா ஹாஸ்பிடல் நிர்வாக இயக்குனர் கே சுதாகர் துவங்கி வைத்தார். மேலும், விழாவில், மாநகரின் முக்கிய தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து நிர்வாக இயக்குனர் நயீம் கான் கூறுகையில், இங்கு அனைத்து அசைவ உணவுகளுக்கும் நோ பிளேட் சார்ஜ், ஒன்லி கிலோ சார்ஜ் முறையில் உணவுகள் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்

Tags

Next Story
ai in future agriculture