கோபி பேருந்து நிலையத்தில் திருமாவளவன் பிறந்த நாள் விழா..!

கோபி பேருந்து நிலையத்தில் திருமாவளவன் பிறந்த நாள் விழா..!
X

கோபி பேருந்து நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட படம்.

கோபி பேருந்து நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் அதன் தலைவா் தொல்.திருமாவளவனின் 62வது பிறந்தநாள் விழா இன்று (17ம் தேதி) கொண்டாடப்பட்டது.

கோபி பேருந்து நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் அதன் தலைவா் தொல்.திருமாவளவனின் 62வது பிறந்தநாள் விழா இன்று (17ம் தேதி) கொண்டாடப்பட்டது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாளான ஆகஸ்ட் 17ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தமிழர் எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இன்று (17ம் தேதி) அவரது 62வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள கட்சி தொண்டர்கள் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.


இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்பியின் 62வது பிறந்த நாள் விழா மாவட்ட மகளிர் அணியின் செயலாளர் குரைஷ் பாத்திமா அப்துல்லா தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட செயலாளர் அம்பேத்கர், இஸ்லாமிய ஜனநாயக பேரவை நிர்வாகி அப்துல்லா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வாழ்த்துக்களை முழக்கங்களாக எழுப்பிய, பின் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், கோபி நகர மற்றும் ஒன்றிய மகளிர் அணியை சேர்ந்த தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
why is ai important to the future