பவானியில் இம்முடி கெட்டி முதலியார் பிறந்த நாள் விழா..!

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் இம்முடி கெட்டி முதலியார் சிலைக்கு தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

பவானியில் இம்முடி கெட்டி முதலியார் பிறந்த நாள் விழா..!
X

இம்முடி கெட்டி முதலியார் சிலைக்கு தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் இம்முடி கெட்டி முதலியார் சிலைக்கு தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கொங்கு நாட்டில் கி.பி. 7ம் நூற்றாண்டில் ஒரு பகுதியை ஆண்ட சிற்றரசரும், பவானி சங்கமேஸ்வரர் கோவிலை கட்டிய மாமன்னர் இம்முடி கெட்டி முதலியார். இவருடைய பிறந்தநாளான தை அமாவாசை திருவோணம் நட்சத்திரம் அன்று தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் சார்பாக, பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள இம்முடி கெட்டி முதலியார் சிலைக்கு மாலை அணிவித்தும், பூஜைகள் செய்தும் வழிபாடு செய்யப்பட்டது.

தொடர்ந்து, சங்கமேஸ்வரர் மற்றும் வேதநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து உலக மக்கள் அனைவரும் நோய் நொடியின்றி இருக்கவும், சந்தோசமாக வாழவும் தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்தின் சார்பாக ஈரோடு மாவட்டத் தலைவர் நந்தகோபால் மற்றும் மாவட்டச் செயலாளர் ஆசைத்தம்பி ஆகியோர் வழிபாடு செய்து அன்னதானம் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் கெட்டி முதலியார் பேரவை தலைவர் நாகேஷ்வரன், தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க நிர்வாகிகள் வச்சவேலு, வைரம், முருகானந்தபதி, பிரதாப், யோகானந்தன், தங்கமாதேஸ்வரன், வெண்டிபாளையம் அனைத்து கிளை நிர்வாகிகள், மகளிர் அணியினர், குருப்பநாயக்கன்பாளையம் கிளை நிர்வாகிகள், கவுந்தப்பாடி கிளை நிர்வாகிகள், கெட்டி முதலியார் பேரவை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Feb 2024 3:00 AM GMT

Related News

Latest News

 1. நாமக்கல்
  நாமக்கல்லில் நாளை முதல் 3 நாட்களுக்கு இலவச யோகா பயிற்சி
 2. தென்காசி
  தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
 3. அம்பாசமுத்திரம்
  நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
 4. மேலூர்
  அழகர்கோவில் கோட்டைச்சுவர் இடிப்பு: இந்து அமைப்புகள் எதிர்ப்பு
 5. நாமக்கல்
  நாமகிரிப்பேட்டையில் 27ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
 6. பாளையங்கோட்டை
  நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 7. ஈரோடு
  அந்தியூரில் ரூ.7.04 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
 8. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 9. காஞ்சிபுரம்
  பரந்தூர் விமான நிலையத்திற்கு 218 பேரிடம் நிலம் கையகப்படுத்த நடவடிக்கை
 10. நாமக்கல்
  நாமக்கல் அருகே ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலம்