அந்தியூரில் உயிர்ம வேளாண் திருவிழா, கண்காட்சி

அந்தியூரில் உயிர்ம வேளாண் திருவிழா, கண்காட்சி

உயிர்ம வேளாண் திருவிழா, கண்காட்சியை தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் வழங்கிய போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உயிர்ம வேளாண் திருவிழா, கண்காட்சி இன்று (8ம் தேதி) நடைபெற்றது. இதனை, எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

அந்தியூரில் உயிர்ம வேளாண் திருவிழா, கண்காட்சி இன்று (8ம் தேதி) நடைபெற்றது. இதனை, எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டார வேளாண்மைத் துறை சார்பில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்ட உயிர்ம வேளாண் திருவிழா, கண்காட்சி அந்தியூர்-பர்கூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (8ம் தேதி) நடைபெற்றது. இந்த வேளாண் திருவிழா, கண்காட்சியை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றியும் தொடங்கி வைத்தார். பின்னர், விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, கண்காட்சியினை பார்வையிட்டார்.


இந்நிகழ்ச்சியில், மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநர் வெங்கடேசன், வேளாண்மை துறை உதவி இயக்குநர் சரவணன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் புட்டன், வையாபுரி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சரவணன் (மைக்கேல்பாளையம்), குருசாமி (சங்கராபாளையம்), மாறன் (கெட்டிசமுத்திரம்), பாவாயி ராமசாமி (கூத்தம்பூண்டி), மாவட்ட பிரதிநிதி மாணிக்கம், வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வைத்தீஸ்வரன், ஒன்றிய துணைச் செயலாளர் முருகேசன், முன்னாள் ஊராட்சி திமுக செயலாளர் தர்மலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story