ஈரோட்டில் நியாய விலைக்கடை, அங்கன்வாடி மையம் அமைக்க பூமி பூஜை

ஈரோட்டில் நியாய விலைக்கடை, அங்கன்வாடி மையம் அமைக்க பூமி பூஜை
X

நியாய விலைக் கடை, அங்கன்வாடி மையம் அமைப்பதற்கான பணிகளை பூமி பூஜை செய்து ஈரோடு மேயர் நாகரத்தினம் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் நியாய விலைக் கடை மற்றும் அங்கன்வாடி மையம் அமைப்பதற்கான பூமி பூஜையை மேயர் நாகரத்தினம் தொடங்கி வைத்தார்.

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் நியாய விலைக் கடை மற்றும் அங்கன்வாடி மையம் அமைப்பதற்கான பூமி பூஜையை மேயர் நாகரத்தினம் தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாநகராட்சி 39வது வார்டு பகுதியில் நியாய விலைக் கடையும், அங்கன்வாடி மையமும் அமைக்க வேண்டுமென அந்தப் பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக மாநகராட்சி கூட்டங்களில் மாமன்ற உறுப்பினர் கீதாஞ்சலி செந்தில்குமார் வேண்டுகோள் விடுத்து வந்தார்.

அவரது முயற்சியின் காரணமாக அய்யர் தோட்டம் எதிரில் அமைந்துள்ள வசந்தம் நகரில் இந்த கட்டிடங்கள் கட்டுவதற்காக 35 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் மனிஷ், துணை மேயர் வி.செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து பணிகளை தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாமன்ற உறுப்பினர் கீதாஞ்சலி செந்தில்குமார், கருங்கல்பாளையம் பகுதி திமுக செயலாளரும், ஈரோடு மாநகராட்சி நான்காம் மண்டல தலைவருமான குறிஞ்சி என்.தண்டபாணி, வட்டச் செயலாளர் கே.டி.மகேஸ்வரன், கேபிள் செந்தில்குமார் மற்றும் பொதுமக்கள் அரசுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!