அந்தியூர் வேம்பத்தியில் ஆழ்துளை கிணறு அமைக்க பூமி பூஜை

அந்தியூர் வேம்பத்தியில் ஆழ்துளை கிணறு அமைக்க பூமி பூஜை
X
வேம்பத்தி கூலிவலசு பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்க எம்எல்ஏ வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
அந்தியூர் அருகே உள்ள வேம்பத்தி ஊராட்சியில் ஆழ்துளை கிணறு அமைக்க எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

அந்தியூர் அருகே உள்ள வேம்பத்தி ஊராட்சியில் ஆழ்துளை கிணறு அமைக்க எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வேம்பத்தி ஊராட்சி கூலிவலசு பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் போதிய அளவிற்கு குடிநீர் விநியோகம் இல்லை. எனவே புதிய ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.


அதன்படி, சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டு, கூலிவலசு பகுதியில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கியது. அந்தியூர் திமுக எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் பூமி பூஜை செய்து ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். புதிய ஆழ்துளை கிணறு அமைத்து, அருகில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி வீடுகளுக்கு குழாய் அமைத்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட உள்ளது.


இந்நிகழ்ச்சியில், திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், விவசாய அணி மாவட்ட துணைத் தலைவர் விவேகம் பாலுச்சாமி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் வையாபுரி, முன்னாள் ஊராட்சி திமுக செயலாளர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!