அத்தாணி பேரூராட்சியில் ரூ.3.8 கோடி மதிப்பிலான பணிகளுக்கு பூமி பூஜை
அத்தாணி பேரூராட்சியில் வாரச்சந்தை மேம்பாட்டு பணிகளுக்கான பூமி பூஜையை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் தொடங்கி வைத்தார்.
அத்தாணி பேரூராட்சியில் ரூ.3.8 கோடி மதிப்பிலான பணிகளுக்கான பூமி பூஜை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் தலைமையில் இன்று (23ம் தேதி) நடந்தது.
ஈரோடு மாவட்டம் அத்தாணி பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு நிதியிலிருந்து வாரச்சந்தை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.2.65 கோடி மதிப்பிலும், 2024-25ம் ஆண்டின் மூலதன மானியம் நிதியிலிருந்து பேரூராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம் கட்டும் பணிக்கு ரூ.1.65 கோடி மதிப்பிலும் என மொத்தம் ரூ.3.8 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ள அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் இன்று (23ம் தேதி) வெள்ளிக்கிழமை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி தலைவர் புனிதவள்ளி செந்தில்கணேஷ், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கணேசன், உதவி பொறியாளர் கணேசன், செயல் அலுவலர் காசிலிங்கம், இளநிலை பொறியாளர் சம்பந்த் மூர்த்தி, பேரூராட்சி துணைத் தலைவர் லோகநாதன், பேரூர் திமுக செயலாளர் செந்தில் கணேஷ், மாவட்ட பிரதிநிதிகள் சண்முகசுந்தரம், மணி, இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகாஷ், ஒன்றிய பிரதிநிதிகள் பாலு, கோதண்டம், அந்தியூர் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி சமூக வைலதள ஒருங்கிணைப்பாளர் யுவராஜா, அத்தாணி பேரூர் திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் முருகன் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu