/* */

கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு மதுபாட்டில்களை கடத்தி வந்தவர் கைது..!

கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு மதுபாட்டில்களை கடத்தி வந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 230 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு மதுபாட்டில்களை கடத்தி வந்தவர் கைது..!
X

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மது பிரியர்கள் மது வாங்க அண்டை மாநிலமான கர்நாடகாவிற்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் வழியாக கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு மது கடத்தி வருவதாக ஆசனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல் நிலையம் முன்பு வாகன தணிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக காய்கறிகளை ஏற்றி வந்த வானத்தை நிறுத்தி சோதனை செய்ததில் காய்கறிக்கு நடுவே சுமார் 230 பாட்டில்களை பதுக்கி வைத்து கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையின் போது வாகனத்தை ஓட்டி வந்த நபர் கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த உதயரங்கநாதன் என்பதும் தமிழகத்தில் முழு ஊரடங்கு என்பதால் இதை பயன்படுத்தி கர்நாடக மாநிலத்தில் இருந்து கோவை மாவட்டத்திற்கு கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதற்காக கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்த ஆசனூர் போலீசார் அவரிடமிருந்த 230 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Updated On: 11 Jun 2021 7:01 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...