புளியம்பட்டி கால்நடை சந்தையில் ஆடு விற்பனை அமோகம்

பு.புளியம்பட்டி கால்நடை சந்தையில் ஆடு விற்பனை செய்யும் வியாபாரி.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள பு.புளியம்பட்டி கால்நடை சந்தை வாரம்தோறும் வியாழக்கிழமை கூடுவது வழக்கம். இதேபோல் நேற்றும் (21ம் தேதி) வழக்கம்போல் கூடியது. சந்தைக்கு, 500க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள், 400க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வந்தன. இந்த சந்தையில் கடந்த வாரத்தை விட ஆடுகளின் விலை, 200 முதல், 400 ரூபாய் வரை உயர்ந்தது. குறிப்பாக கடந்த வாரம், 10 கிலோ வரையிலான வெள்ளாடு கிடாய், 5,500 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று அதே எடை கொண்ட வெள்ளாடு, 6,000 ரூபாய் வரை விற்பனையானது. புரட்டாசி மாதம் முடிந்த நிலையில், தீபாவளி வருவதால் ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்ததாக, வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்
வழக்கம்போல் மளிகை, காய்கறி உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை போட்டனர். இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில், கடை கடையாக சென்று வியாபாரிகளிடம், கொரோனா பரிசோதனை செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu