பவானிசாகர் அணை அருகே பழுதடைந்த பாலம்..! பாலம் அருகே செல்ல தடை..!

பவானிசாகர் அணை அருகே பழுதடைந்த பாலம்..! பாலம் அருகே செல்ல தடை..!
X

bhavanisagar dam water level today-பவானி சாகர் அணை(கோப்பு படம்)

bhavanisagar dam water level today-பவானிசாகர் அணை முன்பாக பாலம் சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் அப்பகுதியில் நிற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

bhavanisagar dam water level today-பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து உபரி நீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக அணையின் முன் பகுதியில் பாலப்பகுதி உடைந்து சேதமாகியுள்ளது.

அணையில் திறக்கவிடப்பட்டுள்ளதால் பொங்கிவரும் தண்ணீரை பார்த்து ரசிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அணை முன்பு கூடுகின்றனர். அவ்வாறு கூடும்போது சேதமடைந்த பாலத்தில் நின்று உபரி நீர் வெளியேறுவதை கண்டு ரசிக்கின்றனர். அப்பகுதியில் நின்று புகைப்படம் எடுக்கின்றனர்.

இந்த நிலையில் பழுதடைந்த பாலத்தில் நின்று ஆபத்தான முறையில் செல்பி மற்றும் புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகளை தடுப்பதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் சேதமடைந்த பாலத்தில் எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டுள்ளது. பழைய பாலம் பழுதடைந்துள்ளதால் பாதசாரிகள் இப்பாலத்தின் அருகில் செல்லவோ, பாலத்தில் நின்று செல்பி, புகைப்படம் எடுக்கவோ கூடாது. மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story