பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.06 அடியாக உயர்வு!

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.06 அடியாக உயர்வு!
X

பவானிசாகர் அணைப் பகுதி.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழைப் பொழிவைப் பொறுத்து, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்து அணை நீர்மட்டம் 96.06 அடியாக உயர்ந்தது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழைப் பொழிவைப் பொறுத்து, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்து அணை நீர்மட்டம் 96.06 அடியாக உயர்ந்தது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள கீழ்பவானி அணை எனப்படும் பவானிசாகர் அணை 105 அடி உயரம் கொண்டது ஆகும். இந்த அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இம்மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், மாயாறும் அணையின் நீர்வரத்து வழித்தட ஆதாரங்களாக உள்ளன.

இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், அட்டைக்கான நீர்வரத்து திடீரென அதிகரிப்பதும், சரிவதுமாக இருந்து வருகிறது. நேற்று (நவ.8) வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,798 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (நவ.9) சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,859 கன அடியாக அதிகரித்துள்ளது.

அதேசமயம், அணையின் நீர்மட்டம் நேற்று காலை 95.86 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 96.06 அடியாக உயர்ந்தது. அதேபோல், அணையில் நீர் இருப்பு 25.61 டிஎம்சியிலிருந்து 25.75 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. மேலும், அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் மட்டும் வினாடிக்கு 1,800 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது