பவானிசாகர் அணை நீர்மட்டம் 95.14 அடியாக உயர்வு
பவானிசாகர் அணை.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (6ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 95.14 அடியாக உயர்ந்தது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக விளங்குவது பவானிசாரில் கட்டப்பட்டுள்ள கீழ்பவானி அணை எனப்படும் பவானிசாகர் அணை. இந்த அணை 105 அடி உயரமும், 33.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இவ்வணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் மழை குறைந்ததால், அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. நேற்று (5ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,126 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (6ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,646 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
அதேசமயம், அணையின் நீர்மட்டம் நேற்று காலை 94.93 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 95.14 அடியாக உயர்ந்தது. அதேபோல், அணையில் நீர் இருப்பு 24.94 டிஎம்சியிலிருந்து 25.09 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. மேலும், அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,055 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu