பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 4,538 கன அடியாக நீடிப்பு
Erode News- பவானிசாகர் அணை.
Erode News, Erode News Today- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (25ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 85.10 அடியிலிருந்து 85.47 அடியாக உயர்ந்தது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாகும். இதன் நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இங்கு பெய்யும் மழை பவானி ஆறு மற்றும் மாயாறு வழியாக பவானிசாகர் அணைக்கு வருகிறது.
இந்நிலையில், நீலகிரி மலைப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது. நேற்று (24ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 4,538 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (25ம் தேதி) 2வது நாளாக காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 4,538 கன அடியாக நீடிக்கிறது.
அதேசமயம், அணையின் நீர்மட்டம் நேற்று காலை 85.10 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 85.47 அடியாக உயர்ந்தது. அதேபோல், நீர் இருப்பு 18.54 டிஎம்சியிலிருந்து 18.76 டிஎம்சியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து வினாடிக்கு 1,205 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும், பவானிசாகர் அணை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 1.4 மி.மீ மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu