பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 85.10 அடியாக உயர்வு

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 85.10 அடியாக உயர்வு
X

பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (24ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 85.10 அடியாக உயர்ந்தது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (24ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 85.10 அடியாக உயர்ந்தது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள கீழ்பவானி அணை எனப்படும் பவானிசாகர் அணை ஈரோடு மாவட்ட மக்களின் நீராதாரமாக விளங்குகிறது. இந்த அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளாக நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், மாயாறும் உள்ளன.

இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. நேற்று (23ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,628 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (24ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 4,538 அடியாக அதிகரித்தது.

அதேசமயம், அணையின் நீர்மட்டம் நேற்று காலை 84.75 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 85.10 அடியாக உயர்ந்தது. அதேபோல், அணையில் நீர் இருப்பு 18.33 டிஎம்சியிலிருந்து 18.54 டிஎம்சியாக அதிகரித்துள்ளது.

மேலும், அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 1,200 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 1,205 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!