Bhavanisagar Dam Update | பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 80 அடியாக உயர்வு

Bhavanisagar Dam Update | பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 80 அடியாக உயர்வு
X

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி 80.21 அடியாக உயர்ந்தது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி 80.21 அடியாக உயர்ந்தது.

தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடி யாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்தது. இதற்கிடையே, நேற்று முன்தினம் முதல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து குறையத் தொடங்கியது. அணைக்கு நீர்வரத்து நேற்று (சனிக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி 3,756 கன அடியாக இருந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி 2,348 கன அடியாக குறைந்தது.

அணை நீர்மட்டம் 80.21 அடியாகவும், நீர் இருப்பு 15.79 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு 1.0 மி.மீ மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்