பவானிசாகர் அணை நீர்மட்டம் 58.15 அடியாக உயர்வு

பவானிசாகர் அணை நீர்மட்டம் 58.15 அடியாக உயர்வு
X

பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன்.21) இன்று காலை 8 மணி நிலவரப்படி 58.08 அடியிலிருந்து 58.15 அடியாக உயர்ந்தது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன்.21) இன்று காலை 8 மணி நிலவரப்படி 58.08 அடியிலிருந்து 58.15 அடியாக உயர்ந்தது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், 3 மாவட்டங்களின் முக்கிய பாசன தேவையாகவும் விளங்குகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழைப்பொழிவைப் பொறுத்து அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக இருந்து வருகிறது. நேற்று (ஜூன்.20) வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 321 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (ஜூன்.21) வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 418 கன அடியாக அதிகரித்தது.

அணையில் இருந்து வினாடிக்கு 205 கன அடி நீர் வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 58.08 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 58.15 அடியாக உயர்ந்தது. அப்போது, நீர் இருப்பு 6.67 டிஎம்சியாக இருந்தது. மேலும், பவானிசாகர் அணை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை எதுவும் பதிவாகவில்லை.

Tags

Next Story
ஆப்பிள் பிரியர்களுக்கான  புதிய  அறிமுகம்..! பழைய விலைக்கே அப்கிரேட்டட் மேக்புக் ஏர் எம்2, எம்3 மாடல்கள்..மிஸ் பண்ணிடாதீங்க!..