பவானிசாகர் அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு..!

பவானிசாகர் அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு..!
X

Erode news- பவானிசாகர் அணை.

Erode news- ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன்.14) இன்று காலை 8 மணி நிலவரப்படி 57.33 அடியிலிருந்து 57.52 அடியாக உயர்ந்தது.

Erode news, Erode news today- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன்.14) இன்று காலை 8 மணி நிலவரப்படி 57.33 அடியிலிருந்து 57.52 அடியாக உயர்ந்தது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. இந்த அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

இந்த நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழைப்பொழிவைப் பொறுத்து அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. நேற்று (ஜூன்.13) வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 793 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (ஜூன்.14) வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 607 கன அடியாக சரிந்தது.

அணையில் இருந்து வினாடிக்கு 155 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 57.33 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 57.52 அடியாக உயர்ந்தது. அப்போது, நீர் இருப்பு 6.48 டிஎம்சியாக இருந்தது.

Tags

Next Story
Spam Call வந்துட்டே இருக்கா.....?  அதுக்குதா ஒரு புதிய தொழில்நுட்பம் ஏர்டெல் நெட்வொர்க் கொண்டுவந்துருக்கா...?